விஜய் டிவி குக் வித் கோமாளி புகழின் கல்யாணம் முடிந்தது, மணமகன் கோலத்தில் இருவரும் நிற்க வீடியோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவி புகழ் நாம் அனைவருக்கும் தெரிந்தவர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவரது இல்லத்தில் புகழ் மற்றும் பென்சி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவி ஷிவாங்கி சிறிது நாள் முன்பு இதை பற்றி போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
தற்போது பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த அவருடைய காதலியான பென்சி என்பவரை திடீர் திருமணம் செய்து இருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.
மிகவும் சிரமப்பட்டு வாழ்வில் முன்னேறிய புகழை ஆரம்ப காலத்தில் இருந்து காதல் செய்தவர் பென்சி , இப்போது தான் காதல் கணவரை கரம்பிடித்து போட்டோக்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. புகைப்படங்கள் அதிகமாக பரவி அருவி போல் வாழ்த்துகள் குவிந்து வண்ணம் உள்ளது. பிரபலங்கள் யாரையும் காணவில்லை என்று ரசிகர்கள் தேடி தேடிய நிலையில் மிகவும் எளிமையான திருமணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் புகழுடைய திருமணம் அவருடைய உறவினர்களுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளதாம். மேலும் பென்சி ஒரு கிருத்துவ பெண் என்பதால் கிருத்துவ முறைப்படி திருமணம் நடக்கலாம் என சொல்லப்படுகிறது.