Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பருவநிலை மாற்றம் உண்டாகும் பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி இருமல் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பர்.

இதற்காக பலரும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் இதனை சரி செய்யலாம்.

அதுமட்டுமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும்.

தேவையான பொருட்கள்:

துளசி இலை

மிளகு 10

சித்தரத்தை

தண்ணீர்

செய்முறை:

சிறிதளவு துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும். பின்பு எடுத்து வைத்துள்ள மிளகை தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சித்தரத்தையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் எடுத்துக் அடுப்பில் வைக்க வேண்டும்.

பின்பு எடுத்து வைத்துள்ள துளசி இலைகள் மற்றும் மிளகுப் பொடியை இதனுடன் சேர்க்க வேண்டும்.

மேலும் சிறிதளவு சித்தரத்தையையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

400 மிலி தண்ணீர் ஆனது 200 மிலி வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்பு இதில் சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம்.

பெரியவர்கள் சூடாகவும் குழந்தைகள் வெதுவெதுப்பாகவும் இந்த கசாயத்தை குடித்து வர சளி இருமல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

Exit mobile version