Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு கப் கோதுமை இருக்கா! இதோ அரை மணி நேரத்தில் கோதுமை பாயசம் ரெடி!

#image_title

இந்த கோடை காலத்துல நம்மளுக்கான ஒரு அருமையான ஸ்வீட் ரெசிபி தான் இந்த தேங்காய் பால் கோதுமை பாயாசம் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப நல்ல ஒரு ரெசிபி

சுகர் பேசன்ட் இருக்காங்களா உங்க வீட்ல அண்ட் குட்டீஸ் இருக்காங்களா உங்க வீட்ல இதை தாராளமா நீங்க செஞ்சு தரலாம். கோதுமை ஒரு பைபர் ஃபைபர் ஃபுட்டுன்னு நம்மளுக்கு தெரியும் இதுல நார்ச்சத்து நிறைய இருக்கு அதனால உடம்புக்கு ரொம்ப நல்லது மற்றும் தேங்காய் பால் சேர்க்கறதனால வயித்துல உள்ள புண்ணையும் சரி பண்ணிடும்

இப்போ நம்ப இந்த கோதுமை தேங்காய் பால் பாயாசம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க. …

தேவைப்படும் பொருட்கள்:

சாப்பாட்டு கோதுமை- 1 கப்
பொடித்த வெல்லம் -3 கப்
உருகிய நெய் -3 ஸ்பூன்
தேங்காய் -2 சிறியது
ஏல பொடி -1/2 ஸ்பூன்
முந்திரி திராட்சை -தேவையான அளவு
தண்ணீர் -3 கப்

செய்முறை:
சாப்பாட்டு கோதுமை உடைத்தது நீரில் அலசி மூணு கப் தண்ணீரில் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும், அடுத்து வெள்ளம் ஒரு கப் சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும், அடுத்து தேங்காய் துருவி மூன்று வகை பால் எடுக்கவும். முந்திரி திராட்சை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும் தேவையான அளவு…

கோதுமை சாதத்துடன் வெல்ல கரைசலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும், நெய்யையும் சேர்த்து கிளறவும் ,தொடர்ந்து கிளறி தண்ணீர் சுண்டியவுடன் மூன்றாவது தடவை எடுத்த தேங்காய் பால் ஒரு கப் ஊற்றி கொதி வரும்போது இரண்டாவது பால் ஒரு கப் ஊற்றவும், பாயாசம் பாதி அளவு சுண்டியதும் முதலில் பிழிந்த பாலை ஊற்றவும், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை ஏல பொடி சேர்த்து கிளறி பாயாசம் பதம் வந்தவுடன் இறக்கவும். லேசான சூட்டில் பாயாசத்தை பருக நன்றாக இருக்கும்…

இத உங்க வீட்ல ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு

Exit mobile version