கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
திருப்பதி எழுமலையான் கோவில் என்பது பக்கதர்கள் அதிகம் வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலுக்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று தரிசனம் செய்ய அனுமதித்துள்ளது.
மாதந்தோறும் ஆன்லைன் மூலமாக இந்த டோக்கன்கள் வழங்கப்படுகின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த மூன்று நாட்களாக விடாது தொடர் மழை பெய்து வருகின்றது.
மழை வரும் நிலையிலும் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.அதனால் இன்று காலை நிலவரப்படி இலவச தரிசனத்திற்கு சுமார் 40மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்திற்கு டோக்கன் வாங்கிய பக்தர்கள் டிக்கெட்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஆனால் திருப்பதிக்கு வந்து இலவச தரிசன டோக்கன் பெறமுடியாமல் திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டப வழியாக செல்லும் பக்தர்கள் 40 நேரம் காத்திருந்து ஏழுமலையானை வழிபடும் நிலை உருவாகியுள்ளது.மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.