கர்ப்ப காலத்தில் பெண்களின் உணவுமுறை எப்படி இருக்க வேண்டும்? எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

0
121

 

ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிறகு உணவுமுறையில் அக்கறை செலுத்த வேண்டும்.சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி,தலைவலி,குமட்டல்,உடல்’சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கர்ப்பிணி பெண்கள் தங்கள் முதல் மாதத்தில் முட்டை,ஆரஞ்சு,பீன்ஸ் போன்ற உணவுகளை அவசியம் உண்ண வேண்டும்.உங்களுக்கு குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனை ஏற்பட்டால் வாழைப்பழம்,மாதுளை,புதினா,கேரட் போன்ற உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இரண்டாவது மாதத்தில் பீன்ஸ்,கீரை,கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆனால் பச்சை முட்டையை உணவாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிலருக்கு ஹோட்டல் உணவுகள் என்றால் அலாதி பிரியமாக இருக்கும்.ஆனால் கர்ப்ப காலத்தில் ஹோட்டல் உணவுகளை தவிர்த்துவிட்டு வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதை பின்பற்ற வேண்டும்.

 

அதிக எண்ணெய்,மசாலா நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.காய்கறிகள்,பழங்கள்,கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

 

கொழுப்பு நிறைந்த இறைச்சியை அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால் மலச்சிக்கல் பாதிப்பு அதிகளவில் ஏற்படக்கூடும்.தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் அருந்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அளவிற்கு அதிகமாக டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.பால்,முளைக்கட்டப்பட்ட கொண்டைக்கடலை,பச்சைப்பயிறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.