Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காட்டுமன்னார்குடி கோவில் பகுதியில் வெடி விபத்தை தொடர்ந்த இன்று விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து !!

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பட்டாசு உற்பத்தி தொழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளி நெருங்குவதால் தொழிற்சாலைகளும் அதிக அளவில் வெடி பொருட்களை தயாரித்து வருகின்றனர். இதனால் அதிக அதிக வெடிவிபத்து ஏற்பட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஒன்றான கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை திடீரென விபத்து வெடி விபத்து ஏற்பட்டு இருந்தது .அங்கு நாட்டு வெடி வெடி வெடித்ததால் சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் உயிரிழந்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிவகாசி அருகே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகே அமைந்திருக்கும் மீனம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலை, இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Exit mobile version