காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்!
கிராமசபை கூட்டம் என்பது ஊராக வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பது,செயல்படுத்துவது ,ஊராட்சி நிர்வாகத்தினை ஊக்குவிப்பது,பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதுவே கிராமசபை கூட்டத்தின் நோக்கம் ஆகும்.கிராம மக்கள் கையில் இருக்கும் அதிகாரமே அதன் நடவடிக்கைகள் எடுப்பதற்கு காரணம் ஆகும்.
அந்தவகையில் இந்த கிராமசபை கூட்டமானது வருடத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் முதலாவதாக குடியரசு தின விழா அன்று நடைபெறும்.அதனையடுத்து தொழிலாளர்கள் தினத்தன்று நடைபெறும்.சுதந்திர தின விழா அன்று நடைபெறும் மற்றும் காந்திஜெயந்தி அன்று நடைபெறும்.வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அப்பொழுது கிராமசபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த கிராமசபை கூட்டத்தில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமது தந்துள்ளனர்.இந்த கூட்டமானது திறந்த வெளியில் நடைபெற வேண்டும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி இது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காலம் என்பதால் தொற்று தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.தனிமனித இடைவெளி கடைபிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த கிராமசபையில் எடுக்கப்படும் தீர்மானம் ஆனது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு இணையான அதிகாரத்திற்கு சமம்.அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட எந்த கிராமசபை தீர்மானமும் அனைத்து நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை இந்த கிராமசபை கூட்டத்தில் கூறி தீர்மானத்தை கொண்டு வரலாம்.அந்த தீர்மானமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.