Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காஷ்மீரின் குல்காமில் மீண்டும் பயங்கரவாதிகள் அட்டூழியம் .

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியும் உள்ளடங்குவதாக போலீஸார் தெரிவித்தனர்.காஷ்மீரின் குல்காமில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் நடவடிக்கை, என்கவுண்டராக மாறியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காமில் உள்ள மிர்ஹாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .J&K: Pak-Based LeT Terrorist Among Two Militants Gunned Down In Kulgam Encounter, Incriminating Materials Recovered

மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது எனவும் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) விஜய் குமார், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில்  ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் இன்னொருவர் ஜெய்ஷ் இம் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.

Exit mobile version