Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

25 Lakh Compensation-will-be-given-to-the doctors family

25 Lakh Compensation-will-be-given-to-the doctors family

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போலவே அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம்,ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தன்னுடைய முதல் கையெழுத்தை போட்டார்.

இந்நிலையில் தான் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும்  ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்

அந்த வகையில் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரமும், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Exit mobile version