Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குட்கா மற்றும் பான் விற்க வாங்க தடை! அரசின் அதிரடி உத்தரவு!

Forbidden to buy and sell Gutka and Pan! Government Order of Action!

Forbidden to buy and sell Gutka and Pan! Government Order of Action!

குட்கா மற்றும் பான் விற்க வாங்க தடை! அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகம் மற்றும் தொடர்ந்து பல மாநிலங்களில் மதுபானங்களை அளிக்குமாறு ஒருபுறம் போராட்டம் செய்துதான் வருகின்றனர். ஏனென்றால் அவற்றை பருகுவதன் மூலம் பல ஆண்மகன்கள் குடும்பத்தை தொலைத்து நிற்கின்றனர். நாளடைவில் அவர்களது குடும்பம் பெருமளவு பாதிப்பை சந்திக்கிறது. சில மாவட்டங்களில் மது பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதுபானம் அருந்திவிட்டு வண்டிகள் ஓட்டுவது நாள் சமீபகாலமாக அதிக விபத்துகள் நடக்கிறது. இதில் உயிர் போகும் அளவிற்கு கூட விபத்துகள் நடக்கிறது. மதுபானங்களை அடுத்து அனைத்து மாநிலங்களும் குட்கா பான் போன்ற மசாலா நிறைந்த போதை பொருட்களும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த போதைப் பொருளுக்கு பெரும்பான்மையான  மாணவர்களே அடிமையாகி உள்ளனர். அதனால் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது புதிய உத்தரவை அமல்படுத்த உள்ளனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் இனி குட்கா மற்றும் பான் போன்ற மசாலா நிறைந்த போதைபொருள் விற்க தடை விதித்துள்ளனர். இத்தடையை சுகாதாரத்துறை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஒரு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மேற்கு வங்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா மற்றும் பான் மசாலாவை உற்பத்தி செய்ய தடை விதித்துள்ளோம். மேலும் உற்பத்தி செய்து வைத்திருந்த பொருளை இனி பதுக்கி வைக்கவும் கூடாது.

அவ்வாறு பதுக்கி வைத்து விற்று வருவது  கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல இந்த போதைப் பொருள்கள் வேறொரு பெயரிலும் சந்தைகளில் விற்கப்படவும் கூடாது என்று தெரிவித்தார். வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் இந்த குட்கா மற்றும் பான் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்தத் தடையானது அடுத்த ஓராண்டிற்கு வரை அமலில் இருக்கும் என்று கூறினார். இத்தடையை போலவே அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தினால் படிக்கும் மாணவர்கள் அதை பயன்படுத்தும் நிலை சற்று குறையும்.

Exit mobile version