ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்பதில் தான் கவலையாக இருக்கின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றனர்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஆரோக்கிய உணவு அவசியமாக இருக்கிறது.
குழந்தைகள் விளையாட்டு போக்கில் உணவு உட்கொள்வதை தவிர்க்கின்றனர்.ஆனால் நாம் சில விஷயங்கள் மூலம் குழந்தைகளை உட்கொள்ள வைக்கலாம்.பெற்றோர் முதலில் தங்கள் குழந்தைகள் எதனால் சாப்பிட மறுக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.
சில குழந்தைகள் பசியின்மை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர்.அதேபோல் மருந்து,மாத்திரையின் பின்விளைவால் கூட குழந்தைகள் சாப்பிடாமல் இருப்பார்கள்.
அதேபோல் பிடிக்காத உணவுகளாலும் குழந்தைகள் உட்கொள்ள மாட்டார்கள்.எப்பொழுதாவது சாப்பிட அடம் பிடிக்கிறார்கள் என்றால் கவலைப்பட தேவையில்லை.ஆனால் அடிக்கடி சாப்பிட மறுக்கும் குழந்தைகளை கவனிக்க வேண்டியது முக்கியம்.
குழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி உணவுகளை சமைத்து தருவதை நிறுத்துங்கள்.அவர்களை கவரும் ஆரோக்கிய வண்ண உணவுகளை உட்கொள்ளலாம்.குழந்தைகளை கட்டாயப்படுத்தி உட்கொள்ள வைக்க கூடாது.
நொறுக்குத் தீனி,பானங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டு வீட்டில் கேரட்,பீட்ரூட் போன்ற காய்கறிகளை கொண்டு கவரும் உணவுகளை செய்து கொடுங்கள்.குழந்தைகளை நன்றாக விளையாட வையுங்கள்.இப்படி செய்தால் குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்கும்.உணவு சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு மொபைல் கொடுத்து சாப்பிட வைக்க கூடாது.அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் உணவுகளை தயாரித்து கொடுக்க வேண்டும்.