இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததற்கு முன்பு, கடந்த மார்ச் மாதத்தில் 29 வெளிநாட்டவர்கள், 6 இந்தியர்கள் உட்பட 35 பேர் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி வழக்கினை பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமத் நகர் மாவட்டத்தில் அனுமதியின்றி தப்லிக் ஜமாத் அமைப்பு மாநாடு நடத்தியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.
இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளை நீதிமன்றம், “ஒரு தொற்று நோய் அல்லது பேரிடர் கால நிலையில் இருக்கும்போது, அந்த நிலையில் அரசியல் ரீதியாக செயல்படும் அரசானது அதற்கு காரணமாக பலி ஆடுகளைத் தேடுகிறது.
இந்த காரணத்திற்காக அந்த வெளிநாட்டவர்கள், இந்தியர்கள் என 35 பேர் பலி ஆடுகளாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்த வழக்குப் பதிவு சூழல்கள் காட்டுகின்றன” என அந்த நீதிபதிகள் கூறினர்.
ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனியான மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தின் கிளையான ஔரங்காபாத் நீதிமன்றத்தில் நீதிபதிகளான டி.வி.நளவாடே மற்றும் செவ்லிகர் ஆகியோரது அமர்வில் விசாரித்தனர்.
மேலும் அந்த மனுவில், “விமான நிலையத்தில் முறையாக பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்பே அனுமதித்ததாக” அந்த மனுவில் மனுதாரர் தெரிவித்துள்ளனர்.