Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாள் என்று குறிப்பிட்ட தெய்வத்தை சென்று வழிபடுவோம். அப்படி வழிபட்டால் அந்த தெய்வத்தின் முழு அருளும், நாம் வேண்டுகிற காரியமும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை நாளன்று சனி பகவான் மற்றும் பெருமாளை வழிபாடு செய்வோம்.
1.சனிக்கிழமை நாள் அன்று புதிய துணிகள் நகைகள் வாகனங்கள் போன்றவை வாங்க கூடாது.
2.இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. ஏனென்றால் இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். ஆனால் மற்றவர்களுக்கு வாங்கி தானம் கொடுக்கலாம் ஏனென்றால் தீராத கடன் தீரும்.
3.புதிய துணி, சீவக்காய், எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்று சேர்ந்தவாறு சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. சனிக்கிழமை மட்டுமல்லாமல் வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு வாங்க கூடாது.
4.சனிக்கிழமையில் உப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் உண்டாகும். அதேபோல வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்குவது நல்லது.
5. சனிக்கிழமையில் செருப்பு, துடைப்பம், ஒட்டடை க் குச்சி போன்றவற்றை தவறியும் வாங்கிவிடக்கூடாது. ஏனென்றால் வீட்டில் உள்ள செல்வங்கள் குறைய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை நாளன்று பெருமாள் வழிபாடும், சனி பகவான் வழிபாடும் மிகச்சிறந்ததாக இருக்கும். சனிக்கிழமை நாட்களில் நமது முன்னோர்களுக்கு விரதம் இருக்கலாம், காகங்களுக்கும் உணவளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவானின் அருள் நமக்கு கிடைக்கும் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.

Exit mobile version