Pu.Tha.Arulmozhi:12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழு நிலவு வருகின்ற ஆண்டு 2025ல் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் என வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்து இருக்கிறார்.
1987 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. இது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு பெற உருவாக்கப்பட்டது. வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி 1987 செப்டம்பர் மாதம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒரு வாரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்து போனது.
அதன் பிறகு அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் MBC(மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்) என்ற இடஒதுக்கீடு கீழ் வன்னியர் சமூகம் உடன் 108 ஜாதியினரை சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் பிறகு வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக அரசியல் வளர்ச்சி பெற்றது. வன்னியர் சங்கத்தினர் ஆண்டுதோறும் சித்திரை சித்திரை முழு நிலவு திருவிழா என்ற மாநாட்டை நடத்தும்.
இந்த நிலையில் தான் கடந்த வருடங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்ட வன்னியர் சங்கம் மாநாடு கலவரம் முடிந்தது. அதாவது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலித் சமூகத்தினருக்கும் பாமக வினருக்கும் கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் சித்திரை திருவிழா நடத்த கோரிய நிலையில் காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.
இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழு நிலவு திருவிழா வருகிற ஆண்டு 2025ல் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் என வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.