இந்தியா முழுவதும் ஏராளமான சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பல மனஸ்தாவங்கள் எழும்புகின்றன. இதனால் சிபிஎஸ்இ கல்வி பயிலும் மாணவர்களின் நெறி பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இதனை சரி செய்ய ஒரு தனிக்குழு அமைத்துள்ளது.
அக்குழுவின் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக ஆலோசனை அட்டவணை தயாரிக்கவும் அக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம், சிறிய பருவம் முதல் அனைத்து பருவமானவர்களுக்கும் தனிக்கவனம் செலுத்தவும், மாணவர்களின் நடத்தை மற்றும் தேர்வு முடிவுகள் அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்வதும், மேலும் இத்திட்டத்தின் படி, தேவையான உதவிகளை உகந்த நேரத்தில் செய்து முடிப்பது போன்றவைகளும் இதனுள் அடங்கும்.
டெல்லி சர்தார் படேல் வித்யாலயா பள்ளி முதல்வர் அனுராதா ஜோஷி இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில், டெல்லி வசந்த் வேலி பள்ளி முதல்வர் ரேகா கிருஷ்ணன், மும்பை போதர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சுவாதி போபர் வாட்ஸ், வட பெங்களூரில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி முதல்வர் மஞ்சு ஆரிஃப், ஆமதாபாத் டிஏவி சர்வதேச பள்ளி முதல்வர் நிவேதிதா கங்குலி, டில்லி பிர்லா வித்யா நிகேதன் பள்ளி முதல்வர் மீனாக்ஷி குஷ்வாகா, டெல்லி ஜெயின் மேரிஸ் பள்ளி முதல்வர் ஆணி கோஷி, அம்பாலா ராணுவ பப்ளிக் பள்ளி முதல்வர் பரம்ஜித் சிங், டில்லி சான்ஸ்கிரிட் பள்ளி முதல்வர் ரிச்சா அக்னி ஹோத்ரி மற்றும் அசாம் கவுகாத்தியின் சரளா பில்லா கியான் ஜோதி முதல்வர் திகாந்தா ஹால்டர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் நோக்கமானது, “சிபிஎஸ்இ வாரியம் ஏற்பாடு செய்த அட்டவணைப்படி, ஆன்லைன் மூலம் பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைக் குழு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து பள்ளி தொடர்பான முடிவுகள் எடுக்கவும், அம்முடிவை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை சரி செய்யும் வகையில் அட்டவணை தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளது. இக்குழுவிற்கு தலைமையகம் மார்ச் 15 அட்டவணையை வெளியிட்டாக வேண்டும்” எனக் குழுவிற்கு கெழு வைத்துள்ளது.