ஆசை வார்த்தைகூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவன் 22வயதான முருகன். இவன் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகனை கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது நிரூபணமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் சைல்டு லைன் அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர்.
பெற்றோர் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அடுத்து அந்த நபர் மீது சைல்டு லைன் அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டான்.