Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலத்தில் மீண்டும் இந்த அறிகுறி! மேலும் பாதிப்பு! மக்கள் அச்சம்!

This sign again in Salem! More vulnerability! People are afraid!

This sign again in Salem! More vulnerability! People are afraid!

சேலத்தில் மீண்டும் இந்த அறிகுறி! மேலும் பாதிப்பு! மக்கள் அச்சம்!

கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர்.நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.அதனை தொடர்ந்து பல தொற்றுகள் மக்களிடையே பரவி வருகிறது.இதனால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோய் பற்றி நிபுணர்கள் தெரிவித்த நிலையில் மேட்டூர் மற்றும் ஓமலூர் பகுதிகளை சேர்ந்த 2 பேர் கோரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது சேலத்தை சேர்ந்த  இரண்டு பேரும், மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தனி அறையில் வைத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று என்று மருத்துவர்கள் இன்னும் உறுதி கூறவில்லை.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வள்ளி சக்தியம்மை, கூறுகையில் தற்போது 5 பேர் கருப்பு பூஞ்சை தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுஉள்ளனர், என்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொது மருத்துவர்கள், மற்றும் கண் நோய்க்கான மருத்துவர்கள் குழு இணைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் அவர், இதற்கு தனி அறையில் சிகிச்சை அளிப்பதாகவும், இதற்கென தனி சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனவும், மக்கள் அச்சப்படவேணாம் எனவும், போதிய மருந்துகள் கையிருப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

கூடுதல் மருந்துகளை அரசிடம் கேட்டு உள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version