Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலத்தகராரு காரணமாக 55 வயது உடைய பெண்ணை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னிமலை – மல்லியம்மாள் என்ற தம்பதிகள். இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். அதே பகுதியில் அவர்கள் நிலத்திற்கு அருகே, பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது.

பல ஆண்டுகளாக இரு குடும்பத்தாருக்கும் நில பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாக்குவாதம் சண்டையாக மாறி , கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதம், அவர்களது மகன்கள் விஜயன், அசோகன் , பொன்னுவேல் ஆகியோர் சேர்ந்து சென்னிமலையின் மனைவி மல்லியம்மாளை சரமாரியாக கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது .

தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.உடனே அவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி மல்லியமாள் உயிருந்துள்ளர்.

இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் மல்லியம்மாளை அடித்து கொலை செய்த கிருஷ்ணன் குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர்.

Exit mobile version