சொல்லி பயனில்லை தனி ஆணையமே சிறந்தது! இங்கிலாந்து பிரதமர் கருத்து!

0
224

இனவெறிக்கு  எதிரான  போராட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். 

கடந்த 25ஆம் தேதி அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் சார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், இன வெறியின் காரணமாக அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன வெறியின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறி அமெரிக்கா ,பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போராட்டங்களால் வெடித்தன .

இதேபோல் இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் கூடி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் கூறுகையில், இனவெறியை கையாளுவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமத்துவத்தின் அனைத்து அமைச்சர்களும் ஆராய்ந்து அதனை கவனிக்க தனி தனி ஆணையம் அமைக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார்.

அதனால் இதுபோன்ற நடவடிக்கையை கைவிட்டு இந்த பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக கண்டறிந்து கவனமாக கையாள  வேண்டும். சென்ற காலத்தை மறந்து வரும் காலத்திற்காக முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேசமயம் ஆணையம் அமைக்கும் பணியும், உறுப்பினர்களை நியமிக்கும் பணியும் அந்நாட்டின் சமத்துவதுறை அமைச்சர் மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.