Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!

Presidential Palace Opening !! Public access with restrictions !!

Presidential Palace Opening !! Public access with restrictions !!

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் உள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளது. இந்த பிரம்மாண்டமான கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 முதல் பொதுமக்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைநகரான டெல்லியில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

இதனால் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகின்றன. காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான நேரங்களில் போது மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்படும். முன்பே பதிவு செய்யப்பட்ட இந்த மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனாதிபதி மாளிகை சுற்றுலா அனுமதிக்கப்படும்.

செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில் அரசு விடுமுறைகள் தவிர்த்து, 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவிற்கு 50 பேர் வீதம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.இது காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version