Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

Buy Gold Coin to Get Vaccinated! Increasing crowd!

Buy Gold Coin to Get Vaccinated! Increasing crowd!

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலை பாதிப்பிற்கு லட்ச கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.பல ஆயிரம் கணக்கான உயிர்களையும் நாம் இழந்து வருகிறோம்.இந்த 2-ம் அலையிலிருந்து மீண்டு வருவதற்கு மக்கள் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.தடுப்பூசி தான் நம் அனைவரின் பாதுகாப்பு கவசம்.அதை அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சில பகுதி மக்கள் விழிப்புணர்வின்றி தடுப்பூசி போட இன்றும் முன் வர வில்லை.அவர்களுக்கு தன்னாரவளர்கள் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழி செய்து வருகின்றனர்.அவ்வாறு ஏற்படுத்தியதில் மக்கள் பலர் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.அந்தவகையில் கோவளம் என்ற கிராம பகுதி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்று எண்ணி தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அப்பகுதி இளைஞர்கள் அதை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி தரப்படும் எனக் கூறினர்.அத்தோடு குழுக்கள் முறையில் தங்க நாணயம்,மோட்டார் பைக்,வாஷிங் மெஷின் போன்றவை தரப்படும் எனவும் கூறினர்,அதைக்கேட்ட மக்கள் ஆவலுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய அப்பகுதி இளையர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version