சமீபத்தில் பெரியார் சிலைக்கு சில மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , சிலையை பாதுகாக்கும் வகையில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் சீர்காழி அருகே தந்தை பெரியார் சிலைக்கு சில மர்மநபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவ்வப்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில், சீர்காழியில் புதிய பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு சீர்காழி காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.