Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

#image_title

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் போலீசில் சரணடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில்  தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் நவீன் வயது 22. அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா வயது 21. நவீனும் கிருஷ்ணாவும் நல்ல  நண்பர்கள்.

இதையடுத்து அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை நவீன் மற்றும் அவரது நண்பன் கிருஷ்ணா என இருவருக்கும் காதலித்து வந்துள்ளனர். முதன்முதலில் நவீன் தான் தனது காதலை அந்த மாணவியிடம் கூறியுள்ளார். அந்த மாணவியும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டதால் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர்.

நவீனும் அந்த மாணவியும் பிரிந்து பல நாட்களுக்கு பின்னர் ஹர ஹர கிருஷ்ணா அந்த மாணவியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். நவீனை விட்டு பல நாட்கள் ஆனதால் அந்த மாணவியின் கிருஷ்ணாவின் காதலை ஏற்றுக் கொள்ளவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பிரிந்து சென்ற போதிலும் நவீன் தனது முன்னாள் காதலிக்கு கால் செய்தும், மெசேஜ் செய்தும் தொல்லை செய்து வந்துள்ளார். இது பற்றி மாணவி தனது காதலனான கிருஷ்ணாவிடம் நவீனின் தொல்லைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா தனது காதலிக்கு தொல்லை கொடுத்து வந்த நவீனை ஒழித்துக் கட்ட முடிவு செய்து 3 மாதங்களாக அதற்கான திட்டம் தீட்டி உள்ளார்.

இதன்படி கடந்த 17-ம் தேதி இரவு தனது நண்பன் நவீனை தில்ஷுக்நகரில் உள்ள தனது வீட்டிற்கு ஹரிஹர கிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர்  இரவு கல்லூரி விடுதியில் நவீனை விட்டுவிடுவதாக ஹரிஹர கிருஷ்ணன் தனது பைக்கில்  அழைத்து சென்றுள்ளார். 

செல்லும் வழியில் பேடா அமெர்பெட் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு நவீனை அழைத்து சென்றார். அங்கு நவீனும் ஹரிஹர கிருஷ்ணனும் மது குடித்துள்ளனர். அப்போது போதையில் காதலில் விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றியதால் ஹர ஹர கிருஷ்ணா தனது நண்பனை கத்தியால் குத்தி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் உடலை இரண்டாகப் பிளந்தும், இதயத்தை வெளியில் எடுத்து, விரல்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத கிருஷ்ணா நவீனின் பிறப்புறுப்பை அறுத்து எடுத்துள்ளார். அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து தனது காதலிக்கு அனுப்பி உள்ளார்.

சம்பவம் நடந்து 9 நாட்களுக்கு பின்னர் போலீசில் அவர் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பனை தீர்த்து கட்டி இதயத்தை வெளியில் எடுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version