தமிழகத்தில் முழு ஊரடங்கா? முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ம் அதிகாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று சேலம் எழில்கொஞ்சும் சுற்றுலா தலமான ஏற்காடு செல்வதற்கு கட்டாயம் ஆர்டி பிசியார் பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் சனி மற்றும் ஞாயிறுகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்லவும் தடை விதித்துள்ளனர்.அதேபோல சேலத்தில் பெரிய சந்தையான கொங்கணாபுரம் சந்தையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.இந்த இடங்களிலெல்லாம் மக்கள் அதிகமாக கூடுவதால் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கோயம்புத்தூர் மால்கள்,பூங்காக்கள் போன்றவை செயல்படவும் திருப்பூரிலும் கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளனர்.சென்ற முறை ஆலோசனை கூட்டம் நடந்தபோது கூடுதலான கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.அந்த ஊரடங்கு ஆனது வரும் 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்தவகையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு குறித்தும் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் ஊரடங்கு போடப்படுமா என்பது பற்றி தெரியவரும்.மேலும் முன்பைப் போல் ஊரடங்கு போடப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் அதிக அளவு பாதிக்கப்படும்.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.