Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

rain alart

rain alart

தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் காணப்படுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல்  5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், நாட்டின் பிற மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன்  கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அசாம் மற்றும் மேகாலயாவில் வரும் 8ம் தேதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version