Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பேருந்து ,ரயில் போன்ற போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது .பள்ளி கல்லூரிகள் கொரோனாவால் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது.அம்மனுவில் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும், இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதால் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க அனுமதி கோரி மாநில அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

அப்போது மனுதாரர் கோரிக்கையை கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடை, ஓட்டல்கள் போன்ற அத்தியாவசிய செயலுக்கு அனுமதிக்கும் போது தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது ஏன்? என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார். அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் கேட்ட நீதிபதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி அனுமதி ன்றி கொடுப்பது ஏன் என்ற கேள்வியை கேட்டார். சரமாரியாக சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள் ,தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரிய மனுவுக்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

Exit mobile version