Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கி இருக்கிறார்கள் .அதாவது அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அதேபோல அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த பல புதிய வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதிகளில் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. அதோடு அதிமுக தலைமையின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டமும் வெடித்தன.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தெரிவித்திருக்கின்ற ஒரு அறிவிப்பில் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனித் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரு வேத. முகுந்தன் அவர்கள் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக வடிவேல் ராவணன் அறிவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version