Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் ஒரு கிளாஸ் வீதம் பத்து நாளுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரும் பொழுது இரத்தசோகை என்ற பிரச்சினையை உங்களுக்கு இருக்காது.

 

முகமும் மிகவும் பொலிவு அடைந்து கருமை கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளபளவென்று ஆகிவிடும். ரத்த சோகையை மட்டும் குணப்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்தத்தை அதிகமாக்கும்.

 

வயதானவர்கள் கூட இதனை குடித்து வரும் பொழுது நல்ல பலன் பெற்று முதுமையை தள்ளி போடலாம்.

 

தேவையான பொருள் என்னவென்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. பீட்ரூட் 1

2. இஞ்சி ஒரு துண்டு

3. எலுமிச்சை பழம் – 1/2

4. நாட்டு சர்க்கரை

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு பெரிய பீட்ரூட்டை எடுத்து அதனை கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

2. ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சியை சேர்க்கவும்.

3. எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி பாதி பழத்தின் ஜூசை பிழிந்து விடவும் .

4. பின் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை அதில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைத்துக் கொள்ளவும்.

6. சுவைக்காக நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

7. பின் நன்கு ஒரு முறை அரைக்கவும்.

8. இப்பொழுது அதனை வடிகட்டி தனியாக ஜூசை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

9. நீங்கள் இதனை பிரிட்ஜில் வைத்து சில்லென்றும் குடிக்கலாம் அல்லது அப்படியேவும் குடிக்கலாம்.

10. வேண்டுமெனில் ஐஸ் க்யூப் அதில் போட்டு குடிக்கலாம்.

11. பீட்ரூட் அரைத்த வடி கட்டிய மீதி இருக்கும் அல்லவா, அதனை குப்பைத் தொட்டியில் போடாமல் அதனுடன் சர்க்கரை சேர்த்து உடம்பு முழுவதும் தேய்த்து குளிக்கலாம்.

 

முதல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் முகத்தை பளபளப்பாக்கும் இந்த ஜுஸ்.

Exit mobile version