Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை!

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை!

பாதாம் என்றாலே அவை அதிக விலையில் இருக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் பொதுவான ஒன்றாக உள்ளது. ஆனால் அதில் என்னென்ன நன்மை இருக்கின்றது என்று நாம் காண்பதில்லை. பாதாமில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

பாதாம் மேல் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்து, மாங்கனிஸ், புரோட்டின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைந்தது.

பாதாமை அப்படியே சாப்பிடுவதனை விட நீரில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது அதன் நன்மைகள் அதிகளவு கிடைக்கின்றது. தூங்க செல்வதற்கு முன்பு நான்கு அல்லது ஐந்து பாதாமை நீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு அதனுடைய தோலை நீக்கி சாப்பிடும் பொழுது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவின் அளவு அதிகரிக்கும்.

அதனால் செரிமானம் அதிகளவு நடைபெறும். நீரில் ஊற வைக்கும் பொழுது பாதாமில் இருக்கும் லைப்இஸ் என்னும் நொதி வெளியாகும். அவை செரிமான மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுகிறது. பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடும் பொழுது நம் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கும்.

வைட்டமின் ஈ அதிக அளவு நிறைந்திருப்பதால் முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகப்பொலிவு பெறும். நீரில் ஊறவைத்த பாதாமில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் இருப்பதால் இவை நம் உடலில் உள்ள இறந்த செல்களிடம் இருந்து நம்மை காக்கும்.

மேலும் இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதினால் அவை உடலில் கொழுப்புகள் உறிஞ்சுவதை தடுக்கிறது. ஊற வைத்த பாதாமை தினந்தோறும் சாப்பிட்டு வர மூளையில் ரத்த ஓட்டம் சீராக அமையும்.

இதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஊறவைத்த பாதாமில் அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளதால் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கஉதவுகிறது.

Exit mobile version