Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

தமிழில்  “தாம் தூம்”  படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான கங்கனா ரனாவத் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

இவர் தமிழில் அந்த அளவிற்கு படங்கள் கிடைக்காவிட்டாலும் ஹிந்தியில் பல மெகா ஹிட்  படங்களை படைத்துள்ளார். ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படமாக்கிய “மணிகர்ணிகா” படத்தில்  துணிச்சல் மிகுந்த வீர மங்கையாக தனது நடிப்பின் வித்தியாசமான  கோணத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

அந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு கருத்து தெரிவித்ததன் மூலம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகபட்டார்.

கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் “மும்பை தற்போது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் போல காட்சியளிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்

இந்தப் பதிவிற்கு “அவ்வளவு பயம்  இருந்தால் நீங்கள் மும்பைக்கு வரவே வேண்டாம்” என்று கங்கனா ரனாவத் சஞ்சய் ராவத் கடுமையாக சாடியுள்ளார். அதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத் ”மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல,  நான் செப்டம்பர் ஒன்பதாம் தேதி மும்பைக்கு வர தான் போகிறேன் முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என்று காட்டமாக பதிவிட்டார்.தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருக்கும்  கங்கனாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version