Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூக்கி எறியும் பொருளில் இவ்வளவு நன்மைகளா!! பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எரிந்து விடாதீர்கள்!!

#image_title

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை நாம் எரிந்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள். சாதாரண வாழைப்பழத் தோல் தானே என்று நினைக்க வேண்டாம் அத்தோலில் கூட பல நன்மைகள் உள்ளது.

இப்பொழுது நம் கையிலோ ,காலிலோ மரச்சில்லு அல்லது முள் குத்தி விட்டால் அதை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் இருப்போம் ஆனால் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப்பழத் தோல் காலில் இருக்கும் முள் குத்திய இடத்தில் தோலை தேய்த்தால் சட்டென்று முள் வெளியே வந்து விடும்.

வாழைப்பழத் தோலில் அவ்வளவு நன்மைகள் உள்ளது அதை நம் சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

வாழைப்பழத் தோலை எப்படி பயன்படுத்துவது என்று நாம் பார்க்கலாம்:

வாழைப்பழத் தோலை பால் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவினால் முகப்பருக்கள் மறைந்து சருமம் அழகாக பொலிவு தரும்.

சரும வறட்சி எண்ணெய் பசை ஆகியவற்றை போக்க வாழைப்பழத் தோல் பயன்படுகிறது.

முதலில் பாலை எடுத்து முகத்தில் நன்றாக தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பின்னர் வாழைப்பழத் தோளின் உள்பகுதியில் உள்ள சதையை எடுத்து முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

அதனால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை போக்கி முகத்தில் சரும வறட்சி குறைந்து நன்றாக ஈரப்பதத்துடன் காணப்படும்.

வாழைப்பழத் தோலை கூழாக்கி அதனுடன் மஞ்சள் சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் அதனுடைய வீக்கம் குறைந்து முகம் பொலிவு தரும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதை தயார் செய்து முகத்தில் தடவலாம்.இதனால் முகத்திற்கு நல்ல மசாஜ் கிடைக்கும்.

காயங்கள் ஏற்படுகிறதா அதற்கு ஒரு எளிய தீர்வு வீட்டில் உள்ள வாழைப்பழத்தை வைத்து செய்யலாம்!. எந்த வகையான காயமாக இருந்தாலும் வாழைப்பழத் தோலை காயத்தின் மீது தேய்த்து வந்தால் குணமாகும்.

கற்றாழை ஜெல்லுடன் வாழைப்பழத் தோளில் உள்ள சதையை சேர்த்து நன்றாக கலந்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் எளிதில் குணமடையும். பருக்களினால் வந்த தழும்புகளும் நாளடைவில் மறைந்து விடும்.

அது மட்டும் அல்லாமல் தேனுடன் வாழைப்பழத் தோலை கூழாக்கி இரண்டையும் குழைத்து முகத்தில் பூசினால் சருமம் பொலிவு தரும். சருமத்தில் ஈரத்தன்மையும் காணப்படும்.
இவ்வளவு நன்மைகள் உள்ள வாழைப்பழத் தோலை வீணாக்க வேண்டாம் .அதை இவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம்

Exit mobile version