Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !

Fire on the plane that flew in the middle! Survivors!

Fire on the plane that flew in the middle! Survivors!

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள்!

விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது  நடுவானில் திடீரென தீப்பிடித்தது அதில் 185 பயனாளிகள் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் இடது புற என்ஜினில் தீ பிடித்துள்ளது.

விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தை அவசர அவசரமாக மீண்டும் பாட்னா விமான நிலையத்திற்கு திருப்பி விமானத்தை தரையிறக்கினார்.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக  தரையிறக்கப்பட்டனர். விமான என்ஜில் இருந்த தீயும் அணைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ” பாட்னாவிலிருந்து தில்லி நோக்கிச் செல்லும் விமானம்  திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இடதுபக்க இன்ஜின் நம்பர் 1-ல் பறவை மோதியதால் தீப்பொறி வந்துள்ளது.

இதனால் விமானத்தின் இறக்கை சேதமடைந்துள்ளது. ஆனால் விமானம் பத்திரமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. மீட்கப்பட்ட 185 பயணிகளுக்கும் மாற்று விமானத்தை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version