Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் ஆண் போல நடப்பதாக பலரும் என்னை விமர்சனம் செய்தனர்!! நடிகை தமன்னா உருக்கம்!!

நான் ஆண் போல நடப்பதாக பலரும் என்னை விமர்சனம் செய்தனர்!! நடிகை தமன்னா உருக்கம்!!

 

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா அவர்கள் நான் ஆண் போல நடப்பதால் பலரும் விமர்சனம் செய்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

இந்திய சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தமிழில் 2006ம் ஆண்டு வெளியான கேடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித், நடிகர் விஜய், விக்ரம், கார்த்தி, சூரியா, தனுஷ், ஜெயம் ரவி, விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

 

தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அரண்மனை நான்காவது பாகத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் சினிமா துறையில் நான் ஆண் போல நடப்பதாக சிலர் தன்னை விமர்சித்தனர் என்று கூறியுள்ளார்.

 

நடிகை தமன்னா அவர்கள் இது குறித்து “நான் எனது பள்ளி பருவ  நாட்களில் பார்ப்பதற்கு ரவுடி போல இருப்பேன். அப்பொழுது இருந்தே நான் நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. நான் சினிமா துறையில் நுழைந்த பொழுது பலரும் நான் ஆண் போல நடப்பதாக விமர்சிதத்னர். ஒரு தயாரிப்பாளர் என்னிடம் தான் ஆணாக நடப்பதாகவும் பெண் போல நடந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார். இதையடுத்து நான் பெண் போல நடப்பதற்கும், சைகை காட்டவும் கற்றுக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று நடிகை தமன்னா அவர்கள் கூறியுள்ளார்.

 

Exit mobile version