Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்

An explosion in a coal mine! Tragic incident in which 22 people died

An explosion in a coal mine! Tragic incident in which 22 people died

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110 க்கும் அதிகமானோர் இந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், திடீரென நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர்.

ஆனாலும், இந்த நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய மற்ற தொழிலாளர்களையும் மீட்பும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version