Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வு! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் சென்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இடைநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வினை சுமார் 202 நகரங்களில் 1682 மையங்களில் சுமார் 16 கோடியே 14 லட்சம் நபர்கள் எழுதினார்கள் இந்த தேர்வை தமிழ்நாட்டில் 1.10 லட்சம் நபர்கள் எழுதினார்கள் இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டைச் சார்ந்த பல மாணவர்கள் இந்த தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றது.

அத்துடன் இந்த தேர்வில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானது இதனால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில் 2 மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக தங்களுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அந்த மாணவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை இந்த 2 மாணவர்களின் மறுத்தேர்வு நடந்த பின்னர்தான் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது இதனை எதிர்த்து தேசிய தேர்வு முகமை டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க இயலாது என தெரிவித்தது. அதோடு நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி அவர் நேற்றைய தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இந்த முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதோடு மாணவர்கள் அனைவரும் தங்களுடைய மின்னஞ்சல் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவ படிப்பு சேர்க்கையில் நீட் தேர்வில் பெற்ற ரேங்க் அடிப்படையில் சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது நீட் தேர்வு முடிவுகள் வெளியான 90 நாட்கள் வரை மட்டுமே பதிவேடு பாதுகாத்து வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

நீட் விடைத்தாள்களை மறு சரிபார்ப்பதற்கோ அல்லது மறுமதிப்பீடு செய்வதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர் பெற்ற மதிப்பெண், தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள இடம் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவை சேர்ந்த மிரினால் குட்டேரி, மராட்டியத்தை சேர்ந்த கார்த்திகா நாயர், டெல்லியை சேர்ந்த தன்மயி குப்தா ஆகிய மூவரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

 

நீட் தேர்வில் நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி கீதாஞ்சலி, மாணவன் பிரவீன் மற்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோர் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அர்சித்தா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Exit mobile version