Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பங்குகளின் சரிவால் விழுந்து, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

அதானியின் நிறுவனங்களின் பங்குகள் சட்டென்று கீழே விழுந்த நிலையில் 900 கோடி டாலர்களை இழந்தது மட்டுமில்லாமல் ஆசியாவின் இரண்டாவது பணக்கார என்ற அந்தஸ்தையும் இழந்தார், அதானி. அம்பானியை விடவும் பின்தங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

 

இவ்வாறு முதலில் 7, 700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இந்த வார இறுதியில் சட்டென்று 6,300 கோடி டாலராக குறைந்தது.

 

அதானி இழந்த 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவன அதிபர், சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார்.

 

NSDL எனும் வைப்பு நிறுவனம், அதானி நிறுவனங்களின் முக்கிய மூன்று முதலீட்டாளர்களின் கணக்கை முடக்கியதாக வெளிவந்த செய்தியே அதானியின் பங்குகள் சரிய காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் அவரது சொத்து மதிப்பும் குறைந்து விட்டது.

 

கடந்த 3 நாட்களில் மட்டுமே அவர் 900 கோடி டாலர்களை இழந்துள்ளார். இன்றைய சூழ் நிலையிலும் அவரது பங்குகள் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரம் கூறுகிறது.

 

கொரோனா காரணமாக அதானியின் சொத்து மதிப்புகள் பல மடங்கு உயர்ந்த நிலையில் இப்பொழுது சரிவைக் கண்டுள்ளது. அவரது 6 நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தை அடைந்திருந்த நிலையில், ஏப்ரல் 2021 அதானி குழுமம் 10,000 கோடி டாலர்கள் மதிப்பு கொண்ட ஆசியாவின் மூன்றாவது குழும நிறுவனமாக இருந்தது.

NSDL – லின் செய்தி தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளது. அவரது பங்குகளும் பின்னடைவை சந்தித்துள்ளது.

 

 

Exit mobile version