Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

இப்பொழுது நமது அனைத்து வகையான பண பரிவர்த்தனை அனைத்திற்கும் ஆன்லைன் ஒரு மூலாதாரமாக ஆகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் எந்த முன்னோர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் எப்படி செலவாகாமல் பணத்தை அவர்களால் பெருக செய்ய முடிந்தது.

செய்யும் தொழில் சரியாக இருந்தால் எண்ணும் எண்ணம் சரியாக இருந்தால் மகாலட்சுமி தங்கள் வீடு தேடி வருவாள் என்பதே அந்த காலத்து ஐதீகம். அப்படி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு கொண்டு வருவது என்பது பற்றி தான் இந்த பதிவு.

என்னதான் காலங்கள் மாறினாலும் நாம் செய்ய வேண்டிய விஷயத்தை செய்தால் மட்டுமே நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நாம் எல்லோரும் பார்த்து இருப்போம். அந்த காலத்தில் பணத்தை அவர்கள் ஒரு மஞ்சள் துணியில் அல்லது மஞ்சள் பையில் போட்டு சுவாமி படத்தின் முன்போ அல்லது பின்போ வைப்பார்கள். அப்படி பணத்தை மஞ்சள் பையில் வைப்பதற்கு கூட ஒரு காரணம் இருக்கின்றதாம்.

இதுபோல மஞ்சள் துணியில் நீங்கள் பணத்தை வைக்கும் பொழுது கண்டிப்பாக உங்களிடம் பணம் வீண் விரயம் ஆகாது என்பது சாஸ்திர நம்பிக்கை.

நமது முன்னோர்கள் இரும்பு பெட்டியில் பணத்தை வைத்தால் கூட மஞ்சள் துணியில் உள்ளே போட்டுத்தான் வைப்பார்கள் அதிலும் உள்ளே சிறிது பச்சரிசியை போட்டும் வைப்பார்கள் அதுதான் அந்த காலத்து ஐதீகம்.

நீங்களும் இதுபோல மஞ்சள் துணியில் உங்கள் பணத்தை போட்டு பீரோவில் உள்ள சாமி படத்திற்கு முன்னே வையுங்கள். நீங்களே ஆச்சரியத்தை உணர்வீர்கள்.

Exit mobile version