Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களா!! உங்களுக்கான சிறந்த வங்கி எது???

பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களா!! உங்களுக்கான சிறந்த வங்கி எது???

 

நம்மில் சிலர் பர்சனல் லோன் அதாவது தனிநபர் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்வோம். நிறைய வங்கிகளில் வட்டி அதிதமாக இருக்கும். நிறைய வங்கிகளில் விதிமுறைகள் அதிகளவு இருக்கும். கடன் வாங்குவதற்கு தகுதிகளும் அதிகமாக இருக்கும். மேலும் பல காரணங்களை காட்டி கடன் வழங்கப்படாது. அவ்வாறு பர்சனல் லோன் வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த வங்கி எது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

திருமணமானவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட வேண்டும், நிலம் வாங்குவதற்கு, சகோதரர்களின் தொழில் தேவைக்கு, எதிர்பாராத செலவுகளுக்கும், அவசர தேவைகளுக்கும் நமக்கு கை கொடுப்பது பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் தான்.

 

அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றது. நமக்கு கடன் தகுதியும் கிரெடிட் ஸ்கோரும் நன்றாக இருந்தால் வங்கிகளே நமக்கு கடன்களை வழங்க தேடி வரும். அதற்காக வங்கிகள் வந்து லோன் வேண்டுமா என்று கேட்டவுடன் லோன் வாங்க வேண்டிய தேவையில்லை. நமக்கு கடன் இருந்தால் மட்டும் வங்கிக் கடன் வாங்கலாம்.

 

இந்த பதிவில் எந்த வங்கிகள் எவ்வளவு வட்டியில் கடன் வழங்குகின்றது. பிராஸசிங் கட்டணம் எவ்வளவு என்ற அனைத்து விவரங்களும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதில் எது சிறந்ததோ அதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

 

தனிநபர் கடன் / பர்சனல் லோன்  வழங்கும் வங்கிகள் மற்றும் அதன் விவரங்கள்…

 

* இந்தியன் வங்கி

 

இந்தியன் வங்கியில் வழங்கப்படும் தனிநபர் கடனுக்கு வட்டிவிகிதம் 10 மீதல் 15 சதவீதம் ஆகும். இதற்கான பிராஸசிங் கட்டணம் 1 சதவீதம் ஆகும். இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் வரம்பு அதிகபட்சம் 70 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* பேங்க் ஆப் இந்தியா…

 

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வட்டி விகிதம் 10.25 சதவீதம் முதல் 14.75 சதவீதம் வரை உள்ளது. பிராசஸிங் கட்டணம் 1 சதவீதம் ஆகும். பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தனிநபர் கடனாக அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடனாகபெற்றுக் கொள்ளலாம்.

 

* ஹெச்.டி.எப்.சி வங்கி

 

ஹெச்.டி.எப்.சி  வங்கியில் வட்டி விகிதம் 10.50 சதவீதம் முதல் தொடங்குகின்றது. பிராசஸிங் கட்டணம் 4,999 ரூபாய் வரை ஆகும். ஹெச்.டி.எப்.சி வங்கியில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* பஞ்சாப் நேஷனல் வங்கி…

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் 10.40 சதவீதம் முதல் 16.95 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 1 சதவீதம் வரை ஆகும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் குறைந்தபட்சம் 50000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது வருமானத்தில் 20 மடங்கு தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* கோடக் மஹிந்திரா வங்கி…

 

கோடக் மஹிந்திரா வங்கியில் 10.99 சதவீதம் வரை வட்டி சதவீதம் தொடங்குகிறது. பிராசஸிங் கட்டணம் 3 சதவீதம் வரை ஆகும். கோடக் மஹிந்திரா வங்கியில் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* ஐசிஐசிஐ வங்கி

 

ஐசிஐசிஐ வங்கியில் வட்டி விகிதம் 10.75 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 2.5 சதவீதம் வரை ஆகும். ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* பேங் ஆப் பரோடா வங்கி…

 

பேங் ஆப் பரோடா வங்கியில் வட்டி சதவீதம் 10.90 சதவீதம் முதல் 18.25 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 2 சதவீதம் வரை ஆகும். பேங் ஆப் பரோடா வங்கியில் குறைந்தபட்சம் 1 லட்சம்  ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி…

 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வட்டி சதவீதம் 11 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 1.50 சதவீதம் வரை ஆகும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் குறைந்தபட்சம் 25000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி

 

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வட்டி சதவீதம் 11.40 சதவீதம் முதல் 15.50 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 1 சதவீதம் ஆகும். யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* ஆக்சிஸ் வங்கி…

 

ஆக்சிஸ் வங்கியில் வட்டி சதவீதம் 10.49 சதவீதம் முதல் 11.50 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 2 சதவீதம் வரை ஆகும். ஆக்சிஸ் வங்கியில் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய்வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

* சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா…

 

சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கியில் வட்டி சதவீதம் 10.95 சதவீதம் முதல் 12.55 சதவீதம் வரை ஆகும். பிராசஸிங் கட்டணம் 1 சதவீதம் வரை ஆகும். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

 

Exit mobile version