Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

#image_title

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் அனைத்தும் மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை என்று ஒரு செய்தி பரவிவருகிறது.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் வானிலை மையம் மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்னும் நான்கு நாட்கள் கனமழை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

 

இதையடுத்து அசாம் மாநிலத்தில் உள்ள டிமா ஹாசாவ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளிக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை என தகவலை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்படும் இடத்தில் வசிப்பவர்கள் மற்றும் கரையோரம் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை குழு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். மழை காலங்களில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அசாம் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version