பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் கல்யாணம் நடக்குதாம்!! பிரசாந்துக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அனைத்தும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந் தொடர் ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. மேலும் இது திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.
அண்ணன் தம்பிகள் நாலு பேரை சுற்றி அமையும் கதையாகும். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மல்லிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார் அண்ணன், தம்பி நால்வர்கள். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி அனைவரையும் அன்பான அரவணைப்பவர். கணவரின் தம்பிகளை தன் பிள்ளையை போல் பார்த்து கொள்வார். இந்த குடும்பத்தில் மற்ற மருமகளாக வரும் மீனா மற்றும் முல்லை ஆகியோரால் இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பது தான் இத்தொடரின் கதை. மேலும் இத்தொடரில் கடந்த வாரம் மூத்த மருமகளான தனம் கதாபாத்திரத்திற்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. மேலும் அந்த வளைகாப்பு விழா நிகழ்ச்சியின் இறுதியில் சில பரபரப்பு கதைகளை கொண்டு வந்து மக்களுக்கு தொடரின் மேல் உள்ள ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கடைசி தம்பியான கண்ணன் கதாபாத்திரம் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை விரும்பி வருகிறது. இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் பிரசாந்த் என்னும் கதாபாத்திரத்திற்கும் திருமணம் முடிவாகியுள்ளது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதால் இந்த கல்யாணத்தை நிறுத்த திட்டமிட்டு வருகின்றனர். ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தேதிக்கு முன்னரே திடீரென நடைபெற உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் கண்ணன் எடுக்கப் போற முடிவு என்ன? கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடக்குமா? அல்லது ஐஸ்வர்யாவுக்கும் பிரசாந்த் இருக்கும் திருமணம் நடக்குமா? என்ற பரபரப்புடன் நேற்றைய தொடரை முடித்துள்ளனர். இந்நிலையில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் திருமணம் நடக்கிறது என்கிறார்கள். ஆனால் இது இன்றைய இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு புரோமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை. திடீரென சீரியலில் வேறு சில திருப்பங்கள் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.