Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

#image_title

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகர் பிரசாந்த். இவர் ஒரு சமயத்தில் விஜய்க்கே போட்டியாக தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த்.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட்டாக தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்தார். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். பிரசாந்தின் பல படங்கள் விஜய் அஜித்தின் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தன.

அப்போது தான் அவர் வாழ்வில் திருமணம் என்ற புயல் வீசியது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த பிரசாந்த் 2005ஆம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் வெறும் ஒன்றரை மாதத்திலேயே முடிவுக்கு வந்து விட்டது. திருமணத்திற்கு பின்னர் தான் கிரஹலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பது பிரசாந்திற்கு தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல இருவரும் 2009ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பெற்றனர். இந்த திருமணத்தால் பிரசாந்தின் குடும்பமே நிலைகுலைந்து போனது. அதுமட்டுமல்ல திரையுலகில் பிரசாந்தின் மார்க்கெட்டும் சரிந்தது. இப்போது தான் பிரசாந்த் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். விட்ட இடத்தை பிடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதற்கிடையில் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரசாந்தின் திருமணம் குறித்து பேசியிருந்தார். அதாவது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றால் பிரசாந்தின் திருமணம் தான். முதல் திருமணம் தான் தவறாக போய்விட்டது. நிச்சயம் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன் என கூறியுள்ளார்.

Exit mobile version