Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அவசரக் கடிதம்!

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதார திட்டமாக இருந்துவரும் 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 73ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 7 மாதங்கள் மட்டுமே முடிவடைந்து இருக்கின்ற சூழ்நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு மாதத்திற்கு முன்பே காலியாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லை அதிலும் குறிப்பாக இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் தமிழக அரசு 1999 கோடியையும், ஆந்திர மாநில அரசு 2323 கோடியையும் கூடுதலாக செலவு செய்து இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி எச்சரிக்கை செய்து இருந்த சூழ்நிலையில் நவம்பர் மாதம் 1ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.

அந்த கடிதத்தில் கிராமபுறங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் மூன்று தினங்களில் உடல் உழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றாக விளங்குகிறது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரத்து 529.69 கோடி விடுவிக்கப்பட்டது அதில் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரையில் தொழிலாளர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்து முழுமையாக செலவிடப்பட்டு இருக்கிறது.

அதன் பின்னர் இந்தத் திட்டத்திற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படாத காரணத்தால் நவம்பர் மாதம் 1ஆம் தேதி என்று இருக்கின்றவாறு சுமார் ஆயிரத்து 178.12 கோடி அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதார பணியாக கருதப்படுகின்றது. தற்சமயம் ஊதியம் கொடுப்பதில் ஏற்பட்டிருக்கின்ற தாமதம் காரணமாக பல ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன இது கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கி இடம்பெயர வழிவகுக்கும் என தெரிவித்திருக்கிறார் அத்தோடு பண்டிகை காலத்தை கருத்தில் வைத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கிட உடனடியாக நீதியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Exit mobile version