Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து பாலிவுட் பிரபலமும் இன் டு தி வைல்டு நிகழ்ச்சியில்??  எப்போ ஒளிபரப்பாக போகிறது தெரியுமா?  

தமிழ் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும்  இன் டு தி வைல்டு என்ற ஃபேமஸான நிகழ்ச்சியில்  பியர் கிரில்ஸ் உடன் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கலந்து கொண்ட இன் டு தி வைல்டு என்ற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  

பியர் கிரில்ஸ்  என்ற தொகுப்பாளர் அடர்ந்த காடுகள் நடுவே சவால்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பல சுவாரசியங்கள் நிறைந்திருப்பதால் அதனை படம் பிடித்து அப்படியே ஒளிபரப்பு செய்வதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. இந்த நிகழ்ச்சி  3.69 மில்லியன் பதிவுகளை  பெற்றது அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  4 மில்லியன் இம்பிரஷன்களை பெற்றது.பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு அந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக போகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் சமூகவலைத்தளங்களில் இன்று வெளியாகியுள்ளது.

 

Exit mobile version