Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று..! – கவலையில் ரசிகர்கள்

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதிலும் பரவி மக்களை வாட்டிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 2020 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலுக்கான தடுப்பூசி செயல்பட்டிற்கு வந்தது.

இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பிய மத்திய அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியது. சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.


இருப்பினும் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் சூழலில் பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அமீர்கானின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும், அவரது உடல் நலமுடன் இருப்பதாகவும்” தெரிவித்தார். மேலும் அண்மையில் அமீர்கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version