பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!!

0
240
BTS Army Day !! The band that delights the fans by releasing a new song !!

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!!

பாங்டன் பாய்ஸ் என்றும் அழைக்கப்படும் பாங்க்டன் சோனியோண்டன் குழு ஆகும். இது ஏழு இளைஞர்களை  கொண்ட தென் கொரிய இசைக்குழு ஆகும். இந்த இசைக் குழு 2010 இல் உருவாக்கத் தொடங்கியது. பிறகு பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்டின் என்ற நிறுவனத்தின் கீழ் 2013 இல் அறிமுகமானது. இந்த இசைக் குழுவில் ஜின், சுகா, ஜே-ஹோப், ஆர்.எம்., ஜிமின், வி, மற்றும் ஜுங்கூக் ஆகியோர்கள் தங்கள் சொந்த வெளியீட்டில் பெரும்பகுதியை இணைத்து எழுதுகிறது. முதலில் ஒரு ஹிப் ஹாப் குழு, அவர்களின் இசை பாணி பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது. அவர்களின் பாடல், பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாகக் கொண்டது. மன ஆரோக்கியம், பள்ளி வயது இளைஞர்களின் தொல்லைகள் மற்றும் வரவிருக்கும் வயது, இழப்பு, தன்னை நேசிப்பதை நோக்கிய பயணம் மற்றும் தனிமனிதவாதம் ஆகிய கருப்பொருள்களைத் தொடும். அவர்களின் படைப்புகளில் இலக்கியம் மற்றும் உளவியல் கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன மற்றும் மாற்று பிரபஞ்சக் கதையையும் உள்ளடக்கியது. இந்த குழு பல ஆல்பங்களை வெளியிட்டு பல உலக சுற்றுப்பயணங்களில் நிகழ்த்தியுள்ளது. இந்த இசைக் குழுவிற்கு தென் கொரியா மட்டுமின்றி உலக அளவிலான பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர்களின் ரசிகர்களை ஆர்மிஸ் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்த இசைக்குழு இதுவரை 350 க்கும் மேற்பட்ட பாடல்களை வெளியிட்டுள்ளது. மேலும் 250 கிகும் மேற்பட்ட விருதுகளை  வென்றுள்ளது. இந்த தென் கொரியா இசைக்குழு இதுவரை வெளியிட்ட அனைத்து பாடல்களும் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை ஈற்காக் கூடியதாகும். அந்த வகையில் கடந்த வருடம் ஊரடங்கு சமயத்தில் வெளியான டைனமைட்(dynamite) என்ற ஆங்கில படல் ஒன்றை வெளியிட்டது. அந்த பாடல் வெளியிட்ட 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து உலக சாதனையை படைத்தது. மேலும் அந்த பாடல் தற்போது 1 பில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பி.டி.எஸ் மே 21 ஆம் தேதி பட்டர் (butter) என்ற தலைப்பில் இவர்களது பாடல் வெளியானது. அந்த பாடல் வெளியாகி அவர்களின் ரசிகர்களை வெகு விரைவாக ஈர்த்தது. மேலும் அந்த பாடல் வெளியாகி கடந்த 24 மணி நேரத்தில் 102 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. இது கடந்த வருடம் வெளியான டைன்மைட் பாடலை முறியடித்துள்ளது. தற்போது அந்த பாடல் வெளியாகி 6 வாரங்கள் கடந்த நிலையில் 432 மில்லியல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த தென் கொரியா இசைக்குழுவான பி.டி.எஸ். கடந்த வருடம் வெளியிட்ட Dynamite பாடலுக்கு பில்போர்ட் இசை விருது எனப்படும் சிறந்த விருதைப் பெற்றுள்ளது. பில்போர்டு மியூசிக் விருதுகள் என்பது ஆண்டுதோறும் வழங்கப்படும்  இசைக்கலைஞர்களுக்கு விருது ஆகும். இது இசை வணிகத்தை உள்ளடக்கிய வெளியீடு மற்றும் இசை புகழ் விளக்கப்படம் போன்றவற்றிக்கு வழங்கப்படும் விருது.

மேலும்  பில்போர்டு மியூசிக் விருதுகள் நிகழ்ச்சி 2007 முதல் 2010 வரை ஆண்டுதோறும் நடைபெற்றது. இதுவரை பி.டி.எஸ். இசைக் குழு 6 முறை நாமினெட் செய்யப்பட்டு 4 விருதுகளைப் பெற்றுள்ளது. தற்போது நடைபெற்ற பில்போர்டு மியூசிக் விருதுகள் நிகழ்ச்சி யிலும் வென்று விருதுகளை வென்றுள்ளது. தற்போது கடந்த மாதம் வெளியான பட்டர் பாடல் வெளியாகி 6 வாரகளாக billboard hot 100 லிஸ்ட் இல் முதல் இடம் பெற்று வருகிறது. ஆசியாவிலயே ஒரு பாடல் வெளியாகி பில்ஃபோர்ட் ஹாட் 100 பட்டியலில் 6 வாரங்களாக 1 இடம் வகிப்பது இதுவே முதல் முறை ஆகும். மேலும் இன்று பி.டி.எஸ்-ன்   அதிகாரப்பூர்வ ARMY  தினம். ஜூலை 9, அன்று பி.டி.எஸ் அவர்களின் ரசிகர்களை ARMY  என்று அறிமுகப்படுத்திய நாள். அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இன்று அந்த இசைக் குழு பர்மிஷன் டூ டான்ஸ் என்ற தலைப்பில் படல் ஒன்று  வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்காக அவர்களின் ஆர்மிஸ் கொண்டாடி வருகின்றனர்.