Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !!

புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்கினால் அதற்கு 24 சதவீதம் வரை அரசு மானியம் பெறும் வகையில் புதிய தொழில் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈட்டிய மாநிலங்களாக தமிழகம் திகழ்ந்து வருகின்றது.கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 41 நிறுவனங்களோடு, ரூபாய் 30,664 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இருப்பினும் முதலீடுகளை மேலும் கவர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை கொண்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக சர்வதேச முதலீடுகளை பெற சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளை தற்பொழுது முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்திய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு அம்சங்களை அடங்கிய புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு 15% முதல் 18 % வரை மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ராணிப்பேட்டை ,திருச்சி, திருப்பத்தூர், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 20% முதல் 24% வரை அரசு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version