புதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்… BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்…
பி.எம்.டபள்யூ நிறுவறத்தின் புதிய பைக் முற்றிலும் புதிய நிறத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. புதிய நிறத்தில் வெளாயாகியுள்ள 2024 பிஎம்டபள்யூ G310 R என்ற பைக் ஸ்டைல் பேஷன் என்று அழைக்கப்படும் நிறத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புதிய நிறத்தில் அறிமுகமான பி.எம்.டபள்யூ G310R பைக் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிரிபிள் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் ஆகிய நிறங்களுடன் இணைந்துள்ளது. பி.எம்.டபள்யூ G310R பைக்கில் நிறத்தை மாற்றிய பி.எம்.டபள்யூ நிறுவனம் புதிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை.
தற்பொழுது ஸ்டைல் பேஷன் என்ற நிறத்தில் அறிமுகமாகியுள்ள பி.எம்.டபள்யூ G310R பைக்கில் சிங்கில்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேங், பாடி நிறத்தால் ஆன கவுல், என்ஜின் கவுல், ரேடியேட்டர் ஷிரவுட்கள், ஸ்டெப் அப் சாடில், 5 ஸ்பேக் அலாய் வீல்கள், சைடு ஸ்லங்க் எக்சாஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
புதியதாக அறிமுகமாகியுள்ள பி.எம்.டபள்யூ G310R பைக்கில் ஹார்டுவேரை பொறுத்தவரை பிரீ லோடுகள் செய்யக்கூடிய அப்சார்பர்கள், 41 மில்லி மீட்டர் அளவு கொண்ட அப்சைடு டவுன் போர்க்குகள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன் பக்கத்தில் 300 மில்லி மீட்டர் அளவு கொண்ட டிஸ் பின் பக்கத்தில் 240 மில்லி மீட்டர் அளவு கொண்ட டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகின்றது.
புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஎம்டபள்யூ G310R பைக்கில் 313சிசி லிக்விட் கூல்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 33.5 ஹெச்பி பவர் மற்றும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இந்த 313 சிசி லிக்விட் கூல்ட் இன்ஜின் E20 ரக எரிபொருள் மற்றும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.