புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

0
147
Attention Family Cardholders! Here is the important information of the government!

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு கட்சியினரும் நாங்கள் ஆட்சிக்கு வரும் பொழுது பெண்களுக்கு மானியத் தொகையாக பணம் வழங்குவோம் என்று கூறினர்.

அந்த வகையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதேபோல் திமுக அரசு தற்போது ஆட்சியில் வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. குடும்பத்தலைவி பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றும் இன்று தான் முடிவுகள் வெளி வருகின்றது. அதனால் சிறிது காலத்திற்கு குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் க்கு ஒப்புதல் வழங்கும் பணி தள்ளிவைத்தனர். தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததால் குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்கள் எப்போது ஒப்புதல் அளிக்கப்படும் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த வேலையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். யோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் களுக்கு வரும் 15 நாட்களுக்குள் ஒப்புதல் அளித்து வழங்கப்படும் என்று கூறினார்.மேலும் 6.50 லட்சம் ரேஷன் கார்டுகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரேஷன் பொருட்களை கடத்துவதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.