பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள்
நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, நலப்பிரிவில்
மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் . தங்க தமிழ்செல்வன் அவர்கள், போடிநாயக்கனூர் நகர்மன்றத்தலைவர் திருமதி. ச.ராஜராஜேஸ்வரி அவர்கள், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு. ஞா.து.பரிமளாசெல்வி அவர்கள், மருத்துவ அலுவலர் மரு. ரவீந்திரநாத் அவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.