பொன்னியின் செல்வன் பற்றிய அப்டேட் வந்தாச்சு!! குவியும் விமர்சனங்கள்!!

0
96
An update on Ponni's wealth is coming !! Accumulating reviews !!

பொன்னியின் செல்வன் பற்றிய அப்டேட் வந்தாச்சு!! குவியும் விமர்சனங்கள்!!

பொன்னியின் செல்வன் இந்த நாவல் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் படைப்பாகும். கி.பி. 1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் பல்வேறு நாடகக் குழுக்களால் மேடை  நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாவல் 1950 முதல் 1955 வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியானது. மேலும் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே நாவல் கல்கி இதழ் தொடராக வெளியானது. மேலும் தனி நூலாகவும் வெளியிட்டு பல பதிப்புகளை கண்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்கியின் நாவலை தமிழ் சினிமா இயக்குனர்கள் பலர் திரைப்படமாக்க நினைத்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி அனைத்துமே தோல்விகளில் தான் முடிந்தது. இதை முறியடிக்கும் வகையில் இயக்குனர் மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் கதையை திரைப்படம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும்  சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகைகள் பணியாற்றியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்த படம் பற்றிய முதல் அறிவிப்புக்குப் பிறகும் வேறு எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்த படக்குழு தற்போது ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்துள்ளது. அது என்னவென்றால் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இப்படத்தைப் பற்றிய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் 2022-ல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. பொன்னியின் செல்வன் என்ற அழகான பெயர்களை கொண்ட இந்தப் படத்தில் போஸ்டர் பி.எஸ்-1 என்ற ஆங்கில எழுதி அதன் கீழ் பொன்னியின் செல்வன் என்று ஆங்கில எழுத்திலும் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டரின் எந்த ஒரு இடத்திலும் தமிழில் தலைப்பை எழுதவில்லை இதற்கக்காக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.